search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சம்பளத்துடன் கூடிய விடுமுறை"

    இந்தியா உள்ளிட்ட 90 நாடுகள் குழந்தைகளை வளர்க்க தந்தைக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளத்துடன் கூடிய விடுமுறையை வழங்க மறுப்பது யுனிசெப் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. #UNICEF #newfathers #paidpaternityleave

    நியூயார்க்:  

    அரசு அலுவலங்களில் பணியாற்றும் கர்ப்பிணிகளுக்கு பேறுகால விடுமுறை வழங்கப்படுகிறது. இதுபோல குழந்தைகளை வளர்க்க தந்தைக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும். இந்த நிலையில் ஐ.நா. சபையின் குழந்தைகள் வளர்ப்பு தொடர்பான யுனிசெப் அமைப்பு சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் இந்தியா உள்பட 90 நாடுகள் புதிதாக பிறந்த குழந்தைகளை வளர்க்க அதன் தந்தைக்கு பேறுகால விடுமுறை வழங்கப்படுவதில்லை என கண்டறிந்துள்ளது. 

    இதுதொடர்பாக யுனிசெப் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில், உலகில் ஒரு வயதுகூட நிரம்பாத 9 கோடிக்கும் அதிகமாக் குழந்தைகள் உள்ளனர். இவர்களது தந்தைகளுக்கு ஒருநாள் கூட சம்பளத்துடன் கூடிய விடுமுறையை இந்தியா உள்ளிட்ட 90 நாடுகள் வழங்கவில்லை. இந்தியா மற்றும் நைஜீரியா நாடுகளில் அதிகளவு குழந்தைகள் உள்ளனர். இந்த நாடுகள் உள்பட 92 நாடுகளில் குழந்தை வளர்ப்பின் போது தந்தைக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக தனியாக தேசிய அளவிலான கொள்கைகள் இல்லை.



    இந்தியாவில் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது தந்தைக்கு பேறுகால விடுமுறையாக 3 மாதம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிப்பதற்கான வரைவு மசோதாவை தாக்கல் செய்ய உள்ளது. குறிப்பாக ஐநா சபை உள்ள அமெரிக்காவிலும் 40 லட்சம் குழந்தைகள் உள்ளன. அங்கும் பேறுகால விடுமுறை அல்லது தந்தைக்கு விடுமுறை வழங்கப்படுவதில்லை. அதே நேரத்தில் அதிக குழந்தைகள் உள்ள பிரேசில் மற்றும் காங்கோவில் தந்தைக்கு பேறுகால விடுறை வழங்குவதற்கான கொள்கை உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக யுனிசெப் நிர்வாக இயக்குனர் ஹென்ரிட்டா போர் கூறுகையில், குழந்தை வளர்ப்பு தொடர்பாக தந்தை மற்றும் தாய்க்கு இடையே அர்த்தமுள்ள கலந்துரையாடல் நடத்துவதற்கும், பிறந்த குழந்தைகளின் மூளை வளர்ச்சியடையவதற்கும், குழந்தைகள் மகிழ்ச்சியாக மற்றும் ஆரோக்கியத்துடன் வளர்வதற்கும் இந்த விடுமுறை உதவும், என்றார். #UNICEF #newfathers #paidpaternityleave
    ×